அந்தி வானில் உலாவினோம், அது உனக்கு நினைவில்லையா?
இதனால் மக்களுக்கு நான் சொல்லிக்கொள்வது என்னவென்றால், அன்பு அண்ணன், அறிவு களஞ்சியம் கண்ணபிரான் கேட்டுகொண்டதிற்கு இணங்க நான் அவ்வப்போது தமிழிலும் எழுத(உளற) போகிறேன். ஆனால் எதிர் கட்சியினர் சொல்கிறார்கள் எனக்கு ரீடர்ஷிப் குறைந்து கொண்டே வருகிறதாம், ஜி3, கில்ஸ், அருணா, தமிழ்மாங்கனி, பிரீத்தீ, இவற்களாவது பிண்ணுட்டம் இடுவார்கள் என்கிற நினைப்பில் தான் எழுதுகிறேனாம்! மெரினா கடல் அருகிலேயே கடலை போடும் கள்ள காதலர்கள் போல வாய் கூசாமல் புரளி பேசும் அவர்களுக்கு நான் சொல்வது ஒன்று தான். நாய் குட்டிக்கு கரண்ட் கம்பம் பார்த்து கால் தூக்க சொல்லி தந்தவர் யார்? அப்படித்தான் எனக்கும் இயற்கையாகவே தமிழ் எழுத பிடித்திருக்கிறது. பில்டப் எல்லாம் முடிஞ்சது, இப்போ மேட்டர். நம்மோட வாழ்கைல சில தருணங்கள் திரும்ப வராதா?, இன்னோரு முறை அதை அனுபவிக்க மாட்டோமான்னு? நாம எல்லோரும் நினைச்சதுண்டு. அப்போதான் போட்டோக்களோட அருமை தெரியுது. ஒரே ஒரு கிளீக் அந்த தருணம் காலத்துக்கும் சுவடா பதிஞ்சாச்சு. அதுக்கப்புறம் அது மறந்தே போயிடும்.எப்பவோ பழைய...