வாழ்க்கை எனக்கு பலமுறை வெறுத்து போனதுண்டு காலம் கூட கனமாய் தோன்றிய நாட்களுண்டு வாரம் ஒரு முறை இவர்களுக்காக படிக்க போவதை மட்டும் வாடிக்கை ஆக்கிக் கொண்டேன்.. எனக்காக கடந்த மூன்று வருடங்களாய் வாழ்கைக் கல்வி கற்றுக் கொண்டிருக்கிறேன் ஆணியால் எழுதுவதால் என்னவோ என் நெஞ்சில் ஆழப் பதிந்துவிட்டார்கள் சூரியன் கூட நிலவுக்கு வெளிச்சம் தந்த பெருமையை அறிந்திருக்கலாம், இவர்கள் பெருமை அறியாத, வேண்டாத சூரியன்கள் இவர்கள் எனக்கு உபதேசம் செய்ததில்லை இவர்கள் வாழும் உபதேசங்கள் இவர்கள் நான் படிக்க கேட்பவர்கள் எனக்கு பாடம் கற்றுத்தருபவர்கள் தம் முகத்தை தாம் பார்த்ததில்லை இவர்கள்தாம் என் முகத்தை எனக்குக் காட்டியவர்கள் பார்க்காமலேயே என்னை வரைந்தவர்கள் தடி கொண்டு நடந்தே எனக்கு வழி காட்டியவர்கள் கண்ணில்லாமலேயே என் கண் திறந்தவர்கள் சினிமா, ஜீன்ஸ், காதல் போன்றவற்றுக்கு மட்டுமே, கல்லூரி வாழ்க்கையை அர்ப்பணித்தவர்கள் மத்தியில் இவர்களும் படிக்கிறார்கள் அதே புத்தகம், அதே பாடங்கள், அதே வாய்ப்பை தேடித்தராத போதும்! தன் காலில் நிற்க வேண்டி ஒரு போராட்டம் அமைதியாகவே, ஒவ்வோரு நாளும் இருட்டில் இருந்து கொண்டும் உழைக்கிறார்கள் வெள...