இத எழுதலாமா வேண்டாமான்னு ரொம்ப யோசிச்சேன் , இதை எழுதற அளவுக்கு என்ன சாதிச்சேன்னு மனசு கேக்குது , நிறைய தப்பு கூட இருக்கும்னு நினைக்கிறேன் . மனசில நனச்சத அப்படியே எழுதனும் .. அதுக்காகத்தான் இந்த பதிவு. கிட்டதட்ட 4 வருஷத்துக்கும் முன்னாடி, முதல் முறை பார்வை இல்லாதவங்களுக்காக படிக்க போனது இன்னமும் நல்லா ஞாபகம் இருக்கு. ராஜேந்திரன் என்கிற இசை கல்லுரி மாணவனுக்கு படிச்சேன். ரொம்ப நல்ல படிக்கறீங்க , உங்கள மாதிரி வேகமா , தங்கு தடை இல்லாம படிக்கறவங்க நிறைய பேர் இல்லைன்னு சொன்னான். என்னமோ அதுவே அடுத்தடுத்த வாரம் போகறதுக்கு ஊக்கமா இருந்தது. ஒவ்வோரு வாரமும் வெவ்வேறு மாணவர்கள். நானும் செய்தி வாசிப்பவர் மாதிரி கஷ்டபட்டு, ஏற்ற இறக்கதோட படிக்க, அவங்க மத்தியிலே பேசப்படற அளவுக்கு வந்துட்டேன். வாரம் ஒரு முறை போகறத பெருமையா நெனச்சுகிட்டேன். என்னமோ நான் ரொம்ப பெரிய சமூக சேவை செய்யறா மாதிரி எல்லர் கிட்டேயும் சொன்னேன். இப்படி இருந்த நான் ஒரு முறை கோடம்பாக்கத்துல இருக்கிற ஹாஸ்டலுக்கு போனேன். அது ஒரு governement free hostel for sc/bc students. பார்வை இல்லாத 20 பேர் அங்கே இருக்காங்க. அவங்களுக்காக ஒதுக்க பட்ட ro...