Tuesday, October 17, 2006

கவிதையானவள்அவளை பற்றி நினைத்தால் கவிதை தான் வருகிறது

கவிதையை பற்றி நினைத்தால் வேறு என்ன வரும்?

சீக்கிரம் முடிந்ததிலும்

நெஞ்சில் நிறைந்ததிலும்

அவளும் ஹைக்கூ கவிதையும் ஒன்றுதான்!

வாழ்கை அவ்வளவு சுலபம் இல்லை, ஆனா போராடணும்!

இத எழுதலாமா வேண்டாமான்னு ரொம்ப யோசிச்சேன் , இதை எழுதற அளவுக்கு என்ன சாதிச்சேன்னு மனசு கேக்குது , நிறைய தப்பு கூட இருக்கும்னு நினைக்கிறேன் .

மனசில நனச்சத அப்படியே எழுதனும் .. அதுக்காகத்தான் இந்த பதிவு.

கிட்டதட்ட 4 வருஷத்துக்கும் முன்னாடி, முதல் முறை பார்வை இல்லாதவங்களுக்காக படிக்க போனது இன்னமும் நல்லா ஞாபகம் இருக்கு. ராஜேந்திரன் என்கிற இசை கல்லுரி மாணவனுக்கு படிச்சேன். ரொம்ப நல்ல படிக்கறீங்க , உங்கள மாதிரி வேகமா , தங்கு தடை இல்லாம படிக்கறவங்க நிறைய பேர் இல்லைன்னு சொன்னான்.

என்னமோ அதுவே அடுத்தடுத்த வாரம் போகறதுக்கு ஊக்கமா இருந்தது.
ஒவ்வோரு வாரமும் வெவ்வேறு மாணவர்கள். நானும் செய்தி வாசிப்பவர் மாதிரி கஷ்டபட்டு, ஏற்ற இறக்கதோட படிக்க, அவங்க மத்தியிலே பேசப்படற அளவுக்கு வந்துட்டேன்.

வாரம் ஒரு முறை போகறத பெருமையா நெனச்சுகிட்டேன். என்னமோ நான் ரொம்ப பெரிய சமூக சேவை செய்யறா மாதிரி எல்லர் கிட்டேயும் சொன்னேன். இப்படி இருந்த நான் ஒரு முறை கோடம்பாக்கத்துல இருக்கிற ஹாஸ்டலுக்கு போனேன். அது ஒரு governement free hostel for sc/bc students. பார்வை இல்லாத 20 பேர் அங்கே இருக்காங்க. அவங்களுக்காக ஒதுக்க பட்ட room , just next to toilet! ஒரு நிமிஷம் கூட என்னால அங்கே இருக்க முடியலை , சரியா சுத்தம் செய்யாத்தால smelling like hell. Not just that , the place is totally unclean and not fit for anyone to live in. கொஞ்ச நாள் முன்னாடி கூட போயிருந்தேன் இன்னும் கூட அப்படித்தான் இருக்கு. இன்னும் சில Hostel போயிருந்தேன் அதுவும் கிட்டதட்ட இதே நிலைமை தான்.

அப்போதான் அவங்கள பத்தி தெரிஞ்சிக்க ஆரம்பிச்சேன். நிறைய பேரோட குடும்பம் கிராமத்துல இருக்கு, அப்பா அம்மா படிக்கதவங்க, கூலி வேலை / விவசாயம் பார்க்கறவங்க. அண்ணா தம்பிங்க எல்லாம் எதோ படிச்சிட்டு எதோ வேலையில் இருக்க இவங்க மட்டும் இங்கே தணியா, படிக்கறாங்க. scholarship கிடைக்கும், இல்லாட்டி யாராவது help பண்ணாத்தான் படிக்க முடியும். நிறையா பேரோட பெத்தவங்க, இவங்க எப்படி சம்பாரிச்சு தரப்போறாங்கன்னு படிப்புக்கு செலவு செய்ய மாட்டாங்க. அப்படியே பணம் கொஞ்சம் இருந்தாலும் இவங்களுக்கு கொஞம் தான் கொடுப்பாங்க. The unbearable rejection at the family side to few of them. government hostel food ல சில சமயம் கரப்பான் பூச்சி கூட இருக்கும்னு சொன்னது கேட்டு அதிர்ந்து போயிட்டேன்.

இத்தனை கஷ்டத்திலேயும் படிக்கணும். science, maths, computers எல்லாம் படிக்கறது கஷ்டம் , படிக்க முடியும் ஆனா - formulas 3d model / voice regonition software in computers அதெல்லாம் இருந்ததான் படிக்க முடியும். இதுனால இவங்க படிக்கறது சிலதுதான் ( BA/MA/ Bed / Med / Mphil - Tamil/ english / history or Music) இதை படிச்சிட்டு ஆசிரியரா மட்டுந்தான் போக முடியும், அதுலேயும் open competition. physically challenged candidate quota (as far as i know its 2 or 3 % only). இவங்க படிக்கறது எல்லோரும் படிக்கும் அதே கல்லூரி அதே பாடம் தான்.

எல்லோரையும் போல assignment எழுதனும். B.ed பண்றவங்க charts/ craft book / handouts எல்லாம் பண்ணனும். என்ன மாதிரி scribes தான் இந்த வேலையெல்லாம் பண்ணி தருவாங்க . Bus stopla பக்கத்துல நிக்கறவங்க BUS number கூட சில சமயம் சொல்ல மட்டாங்க , நேரத்துக்கு college / reading session போகறதே பெரிய வேலையாய் இருக்கும். பசங்களுக்கு இப்படீன்னா பெண்களுக்கு இன்னமும் கொஞ்சம் நெறையவே பிரச்சணைகள்.

நான் நிறைய மாறினதுக்கு காரணம் இவங்கதான். பணிவு , பொருமை , விடாமுயற்சி எல்லத்துக்கும் இவங்க வாழும் உதாரணங்கள். வாழ்கை அவ்வளவு சுலபம் இல்லை, ஆனா போராடணும்!

ராஜெந்திரன் இப்போ இசை கல்லூரி படிப்பு முடிச்சுட்டு - orchestra / light music பாடிட்டு இருக்கான். அவனால Mobile -SMS அனுப்பகூட முடியும். அவனுக்கு தேவையானது எதுவோ முடிஞ்ச மட்டும் கொடுத்துட்டு வந்திருக்கேன். dress/ shoes/ cellphone - ஒருத்தர் வாழ்கையாவது மாற்றலாமே எனகிற எண்ணம்தான். ராஜெந்திரன் மாதிரி எல்லம்மாள் , பத்மா , கருப்பசாமி ( இப்போ மதுரைல ஆசிரியரா வேலைல இருக்கார் ) இன்னும் சில பேருக்கு வேண்டிய மட்டும் உதவி பண்ணிட்டு இருக்கேன்.

போன வருஷம் பத்மாவுக்கு Lady willington collagela exam எழுத போயிருந்தேன், சில பேருக்கு scribe வரவே இல்லை. padmavukku exam எழுதிட்டு இன்னொரு பொண்ணுக்கும் எழுதினேன். அவங்கள நினனச்சு ரொம்ப வருத்தப்பட்டேன், மனசு கேக்கலை - Office வந்த உடனே தெரிஞ்ச வங்களுக்கு ஒரு Mail போட்டேன். cousin மூலமா CTS la ஆரம்பிச்சி எல்லா பெரிய கம்பனிக்கும் போய் நிறைய reply வந்தது.
Scribe Network அப்படித்தான் ஆரம்பிச்சது. அடுத்த 3 நாளைக்கு scribe கெடச்சாங்க.

இப்படி ஆரம்பிச்சு கடந்த ஒரு வருஷமா, 100 க்கும் மேல scribes - exam க்காக arrange பண்ணி இருக்கேன். நிறைய friends கெடைச்சாங்க. exam க்கு scribe arrange பண்றது சாதாரண வேலை இல்லீங்க, நிறைய கால் பண்ணனும், மெயில் போடனும் , அதுவும் working day la dhaan exam erukkum. Few girls colleges will not allow male scribe at all !!.. thats the big head ache. Scribes கெடைக்கிறதே கஷ்டமா இருக்கும். சில சமயம் scribes நேரத்துக்கு போக மாட்டாங்க. exam எழுத ஒத்துண்டதை மறந்து கூட போயிடுவாங்க. Reminder call பண்ணனும்.


நிறைய தடவை கடைசி நேரத்துல ஏதாவது ஒரு குழப்பத்துல scribe இல்லாம போயிருக்கு. கஷ்டப்பட்டு last minutla / an hour late கூட யாராவது scribe networku friends மூலமா, arrange பண்ணிடுவேன்,இல்லாட்டி நானே முடிஞ்சா போய்டுவேன், அப்பெல்லாம் help பண்றதுக்கு இவளோ கஷ்டமான்னு கடவுளை நல்லா திட்டுவேன். exam முடிஞ்சு பசங்க நன்றி சொல்லும் போது எல்லாமே மறந்து போய்டும்.


every sunday reading போவேன்னு சொன்னேன் இல்ல, அங்கே scribes நிறையா கிடையாது, நிறைய students scribe இல்லாம சும்மா வந்துட்டு போவாங்க. scribe வேணும்னு mail போடுவேன், அடுத்த sunday கூட்டமா இருக்கும் , அடுத்த வாரம் மருபடியும் பழைய நிலைமைக்கு வந்துரும்.

பத்மா இப்போ MA enlish literature படிக்கறாங்க. scribe / friends மூலமா பத்மா, சிவசக்தி, இஸ்மாயில் இவங்களுக்கு fees arrange பண்ணோம். நான் வெறும் கருவி தான் , நிறைய நல்ல உள்ளங்கள் help பண்ணறாங்க.

Mail நிறைய போட்டதால IT field la இருக்கிறவங்களுக்கு awarness வந்திருக்கு.
ஆனாலும் ஒரு வருத்தம் - students கிட்டே நிறைய dependency create பண்ணிட்டோமோன்னு. நான் இல்லாட்டி கஷ்டப்படுவாங்களோன்னு.

கொஞசம் freinds இதுல serious ஆ இருக்காங்க, கடவுள் வழி காட்டுவார்னு நம்பிக்கை இருக்கு. இவங்க கிட்ட கத்துகிட்டது தான் - "வாழ்கை அவ்வளவு சுலபம் இல்லை, ஆனா போராடணும்!"

Below are the names few of my scribe network friends who always support me, I take this oppurtunity to thank each and everyone especially surya who never let me down when it comes to arranging scribes. I am very proud about each one of them. Through these people I reached more than hundereds of scribes to read on sundays, write exams, assignments , record casettes and assist students in every way.

Surya Kumar chandrasekar- CTS
Priya charukasadesikan- Relativity
Suchitra Ramaswamy - CTS
Ramya Gunasekaran - CTS
Arun Ramamorrthy - TCS
Lakshmi Narayan - TCS
Vidhya Shankar - HP
Shankar - Office Tiger
Ganesh - Sutherland
Ravi - CTS
Rajkumar - ISOFT
Sudev - Infosys
Sangeetha - Infosys