Wednesday, August 16, 2006

மின்னலைப் பார்த்ததில்ஓரே.. ஒரு முறை

என்னைக் கூப்பிடு,
என் பெயராவது உன் உதடுகளை..

ஓரே.. ஒரு முறை

என்னைப் பார்,
விழிகளின் வழியே உன்னுள் ஒரு நொடி நான்.

நிலவில் வசிப்பது சாத்தியமாம்
உன்னில் நான்?

நிலவினால் தான் அலைகள் உருவாகின்றன
என் நெஞ்சிலும் கூட.

எண்ணிக் கொண்டு இருக்கிறேன்...

இப்பொழுது என்ன செய்கிறாய் என
எப்பொழுதும்.

எப்பொழுதாவது என்னை எண்ணுவாய் என
இப்பொழுதும்.


மின்னலைப் பார்த்ததில்,
கண் மட்டுமல்ல
இதயமும் போனது.

மின்னலுக்காக
வானம் திறந்துதான் இருக்கிறது
என் இதயமும்.

Tuesday, August 15, 2006

இதோ இன்னுமொரு..
மேகங்கள் மல்லு கட்ட,

சாலையெல்லாம் கறுப்பு பூக்கள் பூக்க,

காற்றும் மரங்களும் சண்டையிட,

தண்ணீர் கோலமிட,

சில இதயங்கள் ஈரமாக,

இதோ இன்னுமொரு மழைக்காலம்!

Monday, August 14, 2006

Its not luck but lobster claws

last week I was called by one of my friend to donate blood. Thats for his building contractor who was undergoing a major bypass heart surgery. While in the blood bank, the nurse said that the patient had received blood from 14 volunteers(which is more than required). 6 matching donors ( his group being b -ve) and the rest will be exchanged for b-ve group.

"Lucky" might be the word that comes to your mind. But, the point is whatever we deserve comes to us. My dad always say " the result of the goodness will find its way back to the person, just like the calf comes back to the mother cow amidst huge cattle." I am sure it does!

Even when we lose things, the ones which we deserve find its way back to us. Its not luck sometimes but lobster claws. Confused ? Look at this real story,

A swimmer who lost his wallet during a late night dip has had it returned, thanks to a lobster!
A deep sea diver caught the lobster and found it in the crustacean's claws.

The wallet vanished when Mr Westlake and his 31-year-old brother Paul went for a swim in Plymouth Sound after drinking in a local pub.

It came to light again when the diver got in touch with the Associates hairdressing salon in Plymouth, which Mr Westlake uses.

He collected it there, and found that bank cards it contained still worked despite immersion in sea water and the attentions of the lobster!

If you want to read more
http://www.itn.co.uk/news/headlines_39ff6e84708ff616f96a30a295a0198f.html

Tuesday, August 08, 2006

என் முகத்தை எனக்குக் காட்டியவர்கள்


வாழ்க்கை எனக்கு பலமுறை வெறுத்து போனதுண்டு
காலம் கூட கனமாய் தோன்றிய நாட்களுண்டு

வாரம் ஒரு முறை இவர்களுக்காக

படிக்க போவதை மட்டும்
வாடிக்கை ஆக்கிக் கொண்டேன்.. எனக்காக

கடந்த மூன்று வருடங்களாய்
வாழ்கைக் கல்வி கற்றுக் கொண்டிருக்கிறேன்

ஆணியால் எழுதுவதால் என்னவோ
என் நெஞ்சில் ஆழப் பதிந்துவிட்டார்கள்

சூரியன் கூட நிலவுக்கு வெளிச்சம் தந்த
பெருமையை அறிந்திருக்கலாம்,
இவர்கள் பெருமை அறியாத, வேண்டாத சூரியன்கள்

இவர்கள் எனக்கு உபதேசம் செய்ததில்லை
இவர்கள் வாழும் உபதேசங்கள்

இவர்கள் நான் படிக்க கேட்பவர்கள்
எனக்கு பாடம் கற்றுத்தருபவர்கள்

தம் முகத்தை தாம் பார்த்ததில்லை
இவர்கள்தாம் என் முகத்தை எனக்குக் காட்டியவர்கள்

பார்க்காமலேயே
என்னை வரைந்தவர்கள்

தடி கொண்டு நடந்தே
எனக்கு வழி காட்டியவர்கள்

கண்ணில்லாமலேயே
என் கண் திறந்தவர்கள்


சினிமா, ஜீன்ஸ், காதல் போன்றவற்றுக்கு மட்டுமே,
கல்லூரி வாழ்க்கையை அர்ப்பணித்தவர்கள் மத்தியில்
இவர்களும் படிக்கிறார்கள்

அதே புத்தகம்,
அதே பாடங்கள்,
அதே வாய்ப்பை தேடித்தராத போதும்!

தன் காலில் நிற்க வேண்டி ஒரு போராட்டம்
அமைதியாகவே, ஒவ்வோரு நாளும்

இருட்டில் இருந்து கொண்டும் உழைக்கிறார்கள்
வெளிச்சம் வரும் என்கிற நம்பிக்கையில்

வாழ வேண்டாதவர்கள்
காந்தாரியாக ஒரு நாள் வாழ்ந்து பாருங்கள்
விடியல் பார்ப்பது கூட வரமாய் தோன்றும்!

Wednesday, August 02, 2006

அப்படித்தான்


கூட்டம் கூடவில்லை என
மேகம் காத்திருக்குமா?

கவிதை ஏழுத ஆளில்லை என்று
நிலா மரியல் செய்து பார்த்ததுண்டா?

பரிசு தரவில்லை என
குயில் பாட மறுக்குமா?

முகர்ந்து பார்ப்பவரில்லை என்று
மலர் மொட்டாகுமா?

உனக்கான என் காதலும் அப்படித்தான்!

Tuesday, August 01, 2006

1000 sunsets

When I went to cafeteria last evening , I couldnt stop admiring the wonderful sunset.It like gold glittering everywhere. Its bright, its gold and yellow .It feels heaven.
God must be a painter! While thinking about this , I also remembered one of my favorite song by MLTR - Paint my love written by jascha richter. Isn't it amazing to compare ones love to 1000 sunsets!If one sunset is so beautiful what can I say about 1000!

I always get mesmerized by such beautiful lyrics. I was wondering whether I can watch a perpetual sunset. I mean a sunset which never end. Of course Yes... I can do. If you are wondering why I have gone nuts, here is the principle not from me.. but from "how stuff works"

Let's say you are in plane flying westward around the Earth's equator. At the equator, the time zones are a little over 1,000 miles (1,609 km) apart, so to cross one every hour, your plane would have to fly at over 1,000 miles per hour (1,609 kph). If you started flying at 12:00 noon, at 1:00 p.m. (according to your watch) you would cross a time zone, making it 12:00 noon again. This process would continue for as long as your plane could stay in the air: As soon as your watch passed 12:59, you'd have to turn it back to 12:00 again. For your entire westward trip around the Earth, the time would be between 12:00 noon and 1:00 p.m.

What you are really doing is maintaining your position on the Earth relative to the sun You are flying at the same speed as the Earth is rotating, but in the opposite direction, so the sun is always in the same part of the sky. We know that at noon the sun is approximately overhead, so on this journey the sun would always be over the plane. In effect, you are chasing noon around the world. If you prefer sunsets, you could watch a perpetual sunset by departing on your westward journey just as the sun is setting.

The days will be changing but not the time. So I can really make the time stand still while I watch my visual treat. But I really don't want that. I might get bored watching sunset all day. May be 1000 sunsets when compared one wouldn't be that beautiful :)