மின்னலைப் பார்த்ததில்



ஓரே.. ஒரு முறை

என்னைக் கூப்பிடு,
என் பெயராவது உன் உதடுகளை..

ஓரே.. ஒரு முறை

என்னைப் பார்,
விழிகளின் வழியே உன்னுள் ஒரு நொடி நான்.

நிலவில் வசிப்பது சாத்தியமாம்
உன்னில் நான்?

நிலவினால் தான் அலைகள் உருவாகின்றன
என் நெஞ்சிலும் கூட.

எண்ணிக் கொண்டு இருக்கிறேன்...

இப்பொழுது என்ன செய்கிறாய் என
எப்பொழுதும்.

எப்பொழுதாவது என்னை எண்ணுவாய் என
இப்பொழுதும்.


மின்னலைப் பார்த்ததில்,
கண் மட்டுமல்ல
இதயமும் போனது.

மின்னலுக்காக
வானம் திறந்துதான் இருக்கிறது
என் இதயமும்.

Comments

sri said…
adappavi.. unaku puriyalai adhanala epdi sollittiye...
Unknown said…
Good one....own kavithai??
sri said…
Thanks bala

yes 100% original thaan ;)
gils said…
pinitada.....aniyayathuku nalal iruku...jooper...esp..

எண்ணிக் கொண்டு இருக்கிறேன்...இப்பொழுது என்ன செய்கிறாய் என
எப்பொழுதும்.

எப்பொழுதாவது என்னை எண்ணுவாய் என
இப்பொழுதும்

aaan intha line engayo padicha mathiri iruku :)
sri said…
thanks for the comments.. sondhama ezhudhinahdu thaanda
Anonymous said…
நிலவில் வசிப்பது சாத்தியமாம்
உன்னில் நான்?

good one!!
Aruna said…
//எண்ணிக் கொண்டு இருக்கிறேன்...இப்பொழுது என்ன செய்கிறாய் என
எப்பொழுதும்.

எப்பொழுதாவது என்னை எண்ணுவாய் என
இப்பொழுதும்//

அப்பொழுதும்...இப்பொழுதும்....எப்பொழுதும்....இந்த வரிகள் எனக்குப் பிடிக்கும்
ரொம்ப நன்றாக இருக்கிறது!!
அன்புடன் அருணா
Unknown said…
GOOD DEAR KEEP GOING...........
FunScribbler said…
மின்னலைப் பார்த்ததில்,
கண் மட்டுமல்ல
இதயமும் போனது.//


மச்சி, வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!!:))))
sri said…
ada thoosi thatti comment panni erukka @tamil mango :P

Popular posts from this blog

An Elephant's pride

Goedemorgen Amsterdam - Euro Trip 4

Merci Paris - Euro Trip 3