Tagged to write in Tamil - ச‌ங்கே முழ‌ங்கு!

ச‌ங்கே முழ‌ங்கு! யாருக்கு , ந‌ம்ம‌ளுக்கு தான். ந‌ம்மை யெல்லாம் த‌மிழ்ல‌ லாரி ஏத்த‌ (அதாங்க‌ ப‌திவு போட‌)சொன்னா , த‌மிழ் ச‌முதாய‌ம் என்னை சும்மா விடுமா ? ஆமாம் இப்ப‌டி இவர் என்னை மாட்டி விட்ட‌துக்கு ஆஸ்திரேலியா அனுப்பி இருக்க‌லாம், அங்க‌தான் ஃப்ரீயா குத்த‌றாங்க‌ளே. அனுப்பியா ? இல்லை அணுப்பியான்னு ? யோசிச்சு கிட்டே இருக்கேன். வ‌ல்லின‌ம் , இடையின‌ம் இனி ம‌டைய‌னிட‌ம். "த‌மிழுக்கு வ‌ந்த‌த‌டா கேடு வாங்க‌ இவ‌னுக்கு வைக்க‌லாம் ராடுன்னு" அப்ப‌டீன்னு ஒரு இய‌க்க‌ம் தொட‌ங்கின‌தா கேள்வி. நீங்க‌ ப‌ண்ண‌ பாவ‌ம் எல்லாம் எங்க‌ போகும், அனுப‌வீங‌க‌ இதை படீங்க‌

1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?

12ஆம் நெம்ப‌ர் ப‌ஸ்ல வ‌ந்தது... , அப்பா அம்மா வச்சாங்க‌ , இப்போ ஏன்னு கேக்க முடியுமா? என்னோட‌ பெய‌ரின் அர்த்த‌ம் ‍, அன்பான‌ திரும‌க‌ன் அல்ல‌து திரும‌க‌ளை மார்பில் கொண்ட‌வ‌ன்னு சொன்னாங்க‌, சரி இருந்துட்டு போகுதுன்னு விட்டுடேன். வீட்ல‌ கூப்பிட‌ர‌து ச்சீசு, சில‌ ந‌ண்ப‌ர்கள் சிரீ, பிடித்த‌வ‌ங்க‌ கூப்பிட‌ர‌து வ‌ட்சு க‌ண்ணா , பிடிக்கும் ரொம்ப‌வே!

2. கடைசியாக அழுதது எப்பொழுது?

என்னங்க‌ 2ஆவ‌து கேள்வியே அழுகை ப‌த்தி இருக்கு?
நான் ரொம்ப‌ அழுமூஞ்சி , ந‌ல்லா ப‌ட‌ம் பார்த்தா கூட அழுவேன், ச‌ந்தோஷ‌மா இருந்தாலும் வ‌ரும். நேத்திக்கு அழுதேன் ‍ஆன‌ந்த‌ அழுகை தான், ந‌ண்ப‌னோட‌ பேசிட்டு இருந்த‌ போது , அவ‌ன் ஏதோ சொல்ல நெகிழ்ந்து போய்ட்டேன் :)

3. உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

சூப்பரா இல்லாட்டியும் சுமாரா இருக்கும் , பிடிக்கும் ஆனா யாராவது அழகா எழுத‌ற‌த பார்தா க‌டுப்ஸ்..

4. பிடித்த மதிய உணவு என்ன?

அம்மா கையால‌ சா‌ப்பிடற‌து எல்லாமே.. தயிர் சாத‌ம் , கோங்குரா ரொம்ப‌வே பிடிக்கும்

5. நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

க‌ண்டிப்பா , நான் க‌ண்ணாடி மாதிரி உற‌வுக‌ளில் ஆனா க‌க்ஷ்ட‌ம் குடுத்தா சீக்கிர‌ம் க‌ழ‌ண்டுக்குவேன்.

6. கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

இது ஒரு கேள்வியா? அருவிதான் த‌லைல‌ ப‌டும் போதே ப‌ர‌வ‌ச‌மா இருக்குமே! க‌ட‌ல்ல‌ ர‌ங்கீளா ஊர்மிளா மாதிரி வாக்கிங்க‌ அன்டு ஸ்‌பென்டிங்க மட்டும்தான்

7. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

பார்க்கும் ந‌ப‌ரை பொருத்து :)

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

பிடிச்ச‌து: இன்முக‌ம், குழைந்தைத்த‌‌ன‌ம் ,ச‌மைய‌ல், உத‌வும் ம‌னோபாவம், பாஸிட்வ் அட்டீடுயுடு (த‌மிழ்ல‌ தெரிய‌ல‌ ..த‌.தெ ‍ன்னு வ‌ச்சிப்போம்) :)பிடிக்காத‌து: குறுகிய‌ கோவ‌ம் (short temper lol), சென்சிட்டிவிடி (த‌.தெ),குழைந்தைத்த‌‌ன‌ம், நிறைய பேசுவ‌து.

9. உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
பிடிச்ச‌து: அமைதி , பொறுமை, தன்னடக்கம், முடி, க‌ண்க‌ள், சிரிப்பு.. இன்னும் நிறைய‌ய..

பி‌டிக்காத‌து: என்னுட‌‌ன் இல்லாம‌ல் இருப்ப‌து ..
ஆமா..இப்ப‌டி எல்லாம் ப‌தில் சொல்ல‌னும்னு ஆசை தான் ..ஹும்ம்..

10. யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?

இப்போதைக்கு: அம்மா, அப்பா ,இந்திய‌ ந‌ண்ப‌ர்க‌ள்,
எப்ப‌வும் வ‌ருத்த‌ப‌டுவ‌து: மேல் கேள்விக்கான ப‌தில் பொதும்னு நினைக்கிறேன்.

11. இதை எழுதும் போது என்ன வண்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?

இப்ப‌டி த‌த்தாக்கா பித்த‌க்கான்னு கேள்வி கேட்க‌ கூடாது. நீல‌ நிற‌ ச‌ட்டை, க‌ருப்பு நிற‌ கோடு போட்ட‌ பேண்டு‍, ஆபீஸில் இருக்கிறேன்

12. என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

பார்ப‌து : வேற‌ என்ன‌? க‌ணிணிதான் :) வேலை வ‌ருமான்னு பார்க்கிறேன்

கேட்ப‌து: "கன்றும் உண்ணாது , கலத்தினும் படாது "ஆர‌ம்பிக்க‌ற‌ ர‌குமானின் "தீண்டாய் பாட்டு", ச‌மீப‌த்துல‌ ந‌ண்ப‌ர் அர்த்த‌ம் சொன்னதை கேட்ட‌திலிருந்து ரொம்ப‌ பிடிச்சு போச்சு

13. வண்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

"வ‌ண்ண‌ம் .. அழ‌கிய‌ வ‌ண்ண‌ம்" அப்ப‌டீன்னு ஒரு ப‌ழைய‌ பாட்டு இருக்கு, சுஹாசினி ந‌டிச்ச‌து , அதுமாதிரி(அப்பா இந்த‌ வார்த்‌தை அடிக்க‌ பாடு ப‌ட்டுடேன்,ரொம்ப‌ கொழம்பிட்டேன் த‌.தெ ன்னு போட்டிருக்க‌லாம்) எல்லா வ‌ண்ண‌மும் பிடிக்கும். குறிப்பா மயிலின் க‌ழுத்து வ‌ண்ண‌ம்.

14. பிடித்த மணம்?

அம்மாவின் வாச‌ம், புது புத்த‌க‌ம் வாச‌ம்,புதீனா, வெல்ல‌பாகு காய்ச்சும் வாச‌ம்,பாரிஜ‌த‌ம் பூ, ஸ்ட்ராபேர்ரீ(த‌.தெ),ச‌மீப‌ கால‌மாக‌ ப‌வல்காரி திர‌விய‌ம்.

15. நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

த‌மிழ்மாங்க‌னி , காத‌ல் ர‌ச‌ம் சொட்ட‌ சொட்ட‌ எழுதுவாங்க‌. திடீர் சிரிப்பு கதைக‌ள் டாப் நாட்ச(த‌.தெ)
அருணா , அட்ட‌காசாமா க‌விதை , க‌தை எழுதுவாங்க‌, ரொம்ம்ப தன்னடக்கம் கொண்ட‌வ‌ர்.

இவ‌ங்க‌ளை த‌விர‌ நிறையா பேரை போன‌ ப‌திவுல‌ மாட்டி விட்டுடேன் :) அதான் கார‌ண‌ம்.

16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு?

நிறைய ப‌திவுக‌ள் இருக்கு, ஆனா அம்மாவோட‌ சாட்டிங் ப‌ண்ணும் போது "இத‌ ப‌டிம்மா ந‌ல்லா இருக்குன்னு" அனுபிச்ச‌ முத‌ல் பதிவு இதுதான்

17. பிடித்த விளையாட்டு?

சுவாச‌ பிரச்ச‌னையினால் "ஓடி விளையாடு பாப்பா" எல்லாம் இல்லை. உக்காந்த எட‌த்துல‌ விளையாடுர‌ தாய‌க‌ட்டை,சீட்டுக்க‌ட்டு,ட்ரேடு(த‌.தெ), வேடு ச‌க‌ராம்பிள்(த‌.தெ) எல்லாமே பிடிக்கும்.

18. கண்ணாடி அணிபவரா?

இல்லை, சில‌ ச‌ம‌ய‌ம் அறிவாளியா தெறிய‌ர‌துக்காக‌ ந‌ண்ப‌னோட‌ கண்ணாடி போடுவேன் :)கூல‌ர்ஸ் (த‌.தெ) போட‌ பிடிக்கும்.

19. எப்படிப் பட்ட திரைப்படம் பிடிக்கும்?

என‌க்கே தெரிய‌லை, இப்ப‌டீன்னு சொல்ல‌ முடியாம‌ , நிறைய வ‌கை பிடிக்கும். சில ப‌ட‌ங்க‌கள் சொல்றேன் நீங்க‌ளே முடிவுக்கு வாங்க‌, என‌க்கும் சொல்லுங்க‌.

Notting hill, Love actually, Forrest gump, Beautiful Mind, Wedding date, Four weddings and funeral, Holiday, Matrix, Picture perfect, Lake house, phone booth, Bourne Identity,Ice age, Finding Nemo,Jurassic park,Madagascar,Harry potter, Mona lisa smile, Apocalypto, Taare Zameen par, Swades, Dil to pagal hai,Kal ho na ho, Dil chata hai

தமிழ்ல‌ நிறைய‌ பார்க்க‌ற‌து இல்லை , பிடிச்ச‌ ப‌ட‌ங‌க‌ள்..க‌ண்ட‌ நாள் முத‌ல்,மொழி,சென்னை 28,இந்திரா, முத‌ல்வ‌ன்,சாமி, கேள‌டி க‌ன்ம‌னி, பூவே பூச்சுட‌வா,அழ‌க‌ன்,ஆன் பாவ‌ம், விசு ப‌ட‌ங்க‌ள், அதே க‌ண்க‌ள் , ஆடி வெள்ளி, அம்ம்ன், மிஸ்ஸிய‌ம்மா,மீரா (பழை‌ய‌),ஒள‌வையார் வ‌கை சாமி ப‌ட‌ங்க‌ள்.

20. கடைசியாகப் பார்த்த படம்?

Consipiracy - விறுவிருப்பாக‌ இருந்த‌து

21. பிடித்த பருவ காலம் எது?

சின்ன‌ வ‌ய‌சுல‌ கோடை ரொம்ப‌ பிடிக்கும், லீவு வ‌ரும் நல்லா க‌ழிக்க‌லாம். இப்ப‌ "குளிருது குளிருது..காத‌ல் உற‌வாடும்" ப‌னி கால‌ம்

22. என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

The Eleven minutes - Paulo coelho
இந்த‌ எழுத்தாளர் க‌தைக‌ள் ரொம்ப‌வே பிடிக்கும். எல்ல‌த்தையும் க‌ழித்துவிட்டு "அதை" செய்யும் நேர‌ம், 11 நிமிட‌மாம், உல‌க‌மே க‌ட்டுண்டு கிட‌க்கும் அந்த நிமிட‌ங்களை ப‌ற்றி விரச‌ம் இல்லாமல் எழுதி இருக்கிறார்.இது ஒரு தாஸியின் க‌தை, அவ‌ள் காத‌லை புரிந்து கொள்ள‌ ப‌டும் பாடு ப‌ற்றி, ந‌ல்லாவே போகுது :)

23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

க‌ண‌க்கு எல்லாம் இல்லை, தோணினா மாத்துவேன். இப்போதைக்கு நான் பின்டான் , இந்தனோசியா போன‌ போது எடுத்த‌ ப‌ட‌ம்‍, க‌ட‌ற்க‌ரை‌யில் நான் ஓடமுட‌ன்.

24. பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

பிடித்த‌து: காற்றிலே விண்டு சைம்ஸ் ஆட‌ற‌ ஓசை, கிதார் ஓசை, ர‌யில் கூவுர‌ ச‌த்த‌ம் , பெண்க‌ள் ஹைஹீல்ஸ் போட்டு ந‌ட‌க்க‌ற ச‌த்த‌ம்.வைன் கோப்பைக‌ள் முத்த‌மிட்டு கொள்ளும் ச‌த்த‌ம்

பிடிக்காத‌து: ந‌க‌ம் உறாய்ந்து வ‌ரும் ச‌த்த‌ம் பிடிக்க‌வே பிடிக்காது, ஆம்புல‌ன்ஸ் ச‌த்த‌ம், ஹார்ன் ச‌த்தம்

25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
நிஜ‌மாவே தெரிய‌லை, ல‌ண்ட‌னா இருக்க‌லாம்

26. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

"Jack of all trades" அப்ப‌டீன்னு சொல்ர மாரி நிறைய விஷ‌ய‌ங்க‌ளை சுமாரா செய்வேன்.

27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

ஏமாத்த‌றது, கெட்ட‌ வார்த்தையால் திட்டுவ‌து, அப்ப‌ற‌ம் இப்ப‌டி என்னை த‌மிழ் எழுத‌ மாட்டி விடறது :)

28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

உள் ம‌னசு சில‌ ச‌ம‌ய‌ம் த‌ப்புன்னு தெறிஞ‌சாலும் த‌ப்பு த‌ப்பா யோசிக்கும்.

29. உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

ஐரோப்பால‌ இருக்கிற‌ எல்லா ஊர்க‌ளும் பிடிக்கும். நீல‌ த‌ண்ணீரும் வெள்ளை ம‌ண‌லும் உள்ள‌ க‌ட‌ற்க‌றை கொண்ட‌ இட‌ங்க‌ள் பிடிக்கும்.

30. எப்படி இருக்கணும்னு ஆசை?

காத‌லோடு கால‌மெல்லாம் க‌ண‌ப்பொழுதும் பிறிவின்றி உற‌வாடி உயிர் துற‌க்க‌ வேண்டும்.

31. மனைவி இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?

ஆபீஸ் வேலை தான்

32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

த‌மிழ்ல‌ ச‌ரியா இந்த‌ வாக்கிய‌த்தை சொல்ல‌ முடியாது , அத‌னால ஆங்கில‌த்துல‌ சொல்றேன்

Live till you die!

Comments

Hurrah!
ச்சே இவன் கூட சேர்ந்து சேர்ந்து....
(தமிழில்)
வெற்றி! வெற்றி!
்ம்ம்ம் ...மாட்டி விட்டாச்சா?நான் ஏற்கெனவே மாட்டி பதில் போட்டாச்சு!!...அதையே ரிப்பீட்டடிக்கிறேன்!!!
gils said…
avvvvvvvvvvvvvvvvvvv...
gils said…
//த‌மிழுக்கு வ‌ந்த‌த‌டா கேடு வாங்க‌ இவ‌னுக்கு வைக்க‌லாம் ராடுன்னு// LOL :D

//அன்பான‌ திரும‌க‌ன் அல்ல‌து திரும‌க‌ளை மார்பில் கொண்ட‌வ‌ன்னு சொன்னாங்க‌/

atm..azhagiya tamizh magan??
Thamizhmaangani said…
//த‌மிழ்மாங்க‌னி , காத‌ல் ர‌ச‌ம் சொட்ட‌ சொட்ட‌ எழுதுவாங்க‌. திடீர் சிரிப்பு கதைக‌ள் டாப் நாட்ச(த‌.தெ)//

ஏன் இந்த கொல வெறி?
பழிக்கு பழியா இது?:)
gils said...
//அன்பான‌ திரும‌க‌ன் அல்ல‌து திரும‌க‌ளை மார்பில் கொண்ட‌வ‌ன்னு சொன்னாங்க‌/

atm..azhagiya tamizh magan??//

கில்ஸ்
வத்சம்-ன்னா மச்சம்-ன்னு பொருள்!
அப்போ நீங்க ஸ்ரீயை தமிழில் என்னான்னு கூப்பிடணும்?

திருமச்சான்!

தெனாலி தெய்வ மச்சான் மாதிரி இல்ல?:)))
ஸ்ரீ-க்கு செந்தமிழ்ப் புலமை எவ்ளோ கொட்டிக் கிடக்கு-ன்னு பதிவில் இருந்து மார்க் பண்ணிச் சொல்றேன்! அதுக்கு அப்பறமா அவரை நீங்க மார்க் பண்ணிக்குங்க! :)

//வ‌ல்லின‌ம் , இடையின‌ம் இனி ம‌டைய‌னி‌ம்.//

//த‌மிழுக்கு வ‌ந்த‌த‌டா கேடு வாங்க‌ இவ‌னுக்கு வைக்க‌லாம் ராடுன்னு//

//பிடிச்ச‌து: இன்முக‌ம்//

//காத‌லோடு கால‌மெல்லாம் க‌ண‌ப்பொழுதும் பிறிவின்றி உற‌வாடி உயிர் துற‌க்க‌ வேண்டும்//

இப்போ சொல்லுங்க நம்ம புலவர் தெய்வ மச்சானைப் பற்றி! :)))
//உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

இப்ப‌டி என்னை த‌மிழ் எழுத‌ மாட்டி விடறது :)//

அடப் பாவி! இதுக்கு நான் எப்போ வாங்கிக் கட்டிக்கப் போறேனோ தெரியலையே!

//பாஸிட்வ் அட்டீடுயுடு (த‌மிழ்ல‌ தெரிய‌ல‌ ..த‌.தெ ‍ன்னு வ‌ச்சிப்போம்) :)// = முற்போக்கு எண்ணம்!

//பிடிக்காத‌து: குறுகிய‌ கோவ‌ம் (short temper lol),// = :) குறுஞ்சினம்!

//சென்சிட்டிவிடி (த‌.தெ)// =
நெகிழ்மை!

//ஸ்ட்ராபேர்ரீ(த‌.தெ)// = ஸ்ட்ரா பெரியே தான்! :)

//த‌மிழ்ல‌ ச‌ரியா இந்த‌ வாக்கிய‌த்தை சொல்ல‌ முடியாது , அத‌னால ஆங்கில‌த்துல‌ சொல்றேன்
Live till you die!// = இறக்கும் வரை வாழ்-ன்னு சொல்லலாம்! அதை விட சிறப்பு = வாழும் வரை வாழ்! வாழ்! :)
//The Eleven minutes - Paulo coelho//

Now switching to Sri's comfort style of writing...

Sri,
This is one of the books, I enjoyed reading more than three times.
The Eleven Minutes is a kinda erotic but powerfully expressive novel. More than the erotica, it is the sheer straightforwardness and truth, that makes this novel, so interesting to read.
Words are so short but very sharp, that comes from the mouth of Maria.
That too terms like "sacred sex"!

We have had the same theme in same of our movies like nayagan, but the plot in the book is so distinct to stand apart the masala! When one put downs the book, sure will he/she ask a question to herself - "sex in love? or love in sex?" - Paulo Coelho triggers your introspection :)

One of my fave novels! :)
and we have almost the same story in sri vaishnava guru parampara prabhavam. No conclusions. Just affirmatives :)
Srivats said…
@ KRS
வ‌ஞ்ச‌ம் தீர்த்த‌ ந‌ண்பா!

//தெனாலி தெய்வ மச்சான் மாதிரி இல்ல?:)))
//

கும்மி அடி அண்ண‌ கும்மி அடி.. ஹைய‌கோ! .. என்ன‌ த‌வ‌று செய்தென் இப்ப‌டி மாட்டி கொள்ள‌

//ஸ்ரீ-க்கு செந்தமிழ்ப் புலமை எவ்ளோ கொட்டிக் கிடக்கு-ன்னு பதிவில் இருந்து மார்க் பண்ணிச் சொல்றேன்! அதுக்கு அப்பறமா அவரை நீங்க மார்க் பண்ணிக்குங்க! :)//

ந‌ல்ல‌ ஆளுய்யா, பிள்ளையையும் கிள்ளி விட்டு , தொட்டிலையும் ஆட்ட வ‌ந்தீரா ?


//அடப் பாவி! இதுக்கு நான் எப்போ வாங்கிக் கட்டிக்கப் போறேனோ தெரியலையே!
//

க‌ர்மா வ‌ரும் உன் அன்ராய‌ரில் ஆப்பு வைக்க‌ ..இல்லாட்டி காசு கொடுத்து அனுப்பி வைக்கிறேன்

போக‌ட்டும் இந்த‌ நாரத‌ர் க‌ல‌க‌மும் ந‌ன்மையில் தானே முடிந்த‌து.. உங்க‌ளால்தான் த‌மிழில் எழுதினேன்..
......

அப்பாடி இதுக்கு மேலே தாங்காத‌ய்யா.. இதுக்கே கண்ண‌ க‌ட்டிருச்சு! த‌மிழ் வார்த்தைக‌ள் சொல்லித்த‌ந்தற்து ரொம்ப‌ ந‌ன்றி!
Srivats said…
@ Aruna

Sorry for spoiling ur name - LOL :)

Thanks for the comments
Srivats said…
@ Gils

amaam pa adhu onnu dhaan baaki.. ATM nnu sollittu kasu kekka kudaadhu
gils said…
//urrah!
ச்சே இவன் கூட சேர்ந்து சேர்ந்து....
(தமிழில்)
வெற்றி! வெற்றி!//
LOL...agmark krs kusumbu :D

//திருமச்சான்!

தெனாலி தெய்வ மச்சான் மாதிரி இல்ல?:))/
ROTFL :D :D ithunallarukay
Srivats said…
@ Krs

You too like his novels! good good. You are much talented than me in both english and tamil. Your review is very good. Thanks a lot for tagging and all your comments, if not for you I wouldnt have writtern in tamil again.

:)
Sri
Srivats said…
@ Thamiz

Edho ennala mudinjadhu :)

Please write, it will be much better and fun than mine ;)
"த‌மிழுக்கு வ‌ந்த‌த‌டா கேடு வாங்க‌ இவ‌னுக்கு வைக்க‌லாம் ராடுன்னு" //

ஹா ஹா ஹா ......

Popular posts from this blog

A CSI Wedding and 13 ghosts

Raagi seeds from the loft

Calliographic Ode to a Kanakambaram Flower